world

img

பிலிப்பைன்ஸ்: ராய் புயலில் சிக்கி 373 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டில் ராய் புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 373 ஆக உயர்ந்துள்ளது. 
பிலிப்பைன்ஸ் நாட்டில் ராய் புயல் காரணமாக மணிக்கு 121 கிமீ முதல் 270 கிமீ வரை சூறாவளி காற்று சுழன்று விசியது.  2 நாட்களாகவே புயல் வீசி கொண்டே இருந்ததில், நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன, மின் கம்பங்கள் சரிந்ததோடு மீன்பிடி படகுகள் தூக்கி வீசப்பட்டன. ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டன.. கால்நடைகள் உயிருடன் அடித்து செல்லப்பட்டன. வாகனங்கள் நீரில் மிதந்தன. லட்சக்கணக்கில் பயிரிடப்பட்ட விவசாய பயிர்கள் நாசமாயின.
இதில், குறைந்தது 375 பேர் உயிரிழந்துள்ளதாக என்று அந்நாட்டு காவல்துறை தெரிவிக்கிறது. 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோரை காணவில்லை என்று உள்ளூர் போலீசார் கூறுகிறார்கள். மிகவும் பரவலான இடங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது.  இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.  4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு மாகாணங்களில் தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டு உள்ளதால், இறப்பு எண்ணிக்கை முழுமையாக வந்து சேரவில்லை. முழுவீச்சில் மீட்பு பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் புயல் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 
இதற்கு முன்பு இப்படி ஒரு சக்திவாய்ந்த புயல் பிலிப்பைன்சை தாக்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

;